கோவில் இடிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு: போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம்
ஸ்ரீபெரும்புதூர் அருகே கோவில் இடிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தாசில்தார் அலுவலகம் மற்றும் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு இந்து அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஸ்ரீபெரும்புதூர்,
காஞ்சீபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அடுத்த கிளாய் பகுதியில் 13 ஏக்கர் பரப்பளவில் புறம்போக்கு இடம் உள்ளது. இந்த இடத்தை ஆக்கிரமிப்பு செய்த தனியார் சிலர், அந்த பகுதியில் கட்டிடங்களை கட்டி உள்ளனர். மேலும் அந்த பகுதியில் கனகாம்பிகை உடனுறை கனககாளீஸ்வரர் கோவிலும் கட்டப்பட்டு இருந்தது.
இந்த நிலையில், அரசு இடத்தை ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டிருந்த கட்டிடங்கள் மற்றும் கோவிலை வருவாய்த்துறை அதிகாரிகள் கடந்த சில தினங்களுக்கு முன்பு பொக்லைன் எந்திரங்கள் மூலம் இடித்து அகற்றினர். இந்த நிலையில், கோவில் இடிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து அமைப்பை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் ஸ்ரீபெரும்புதூர் தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு மனு வழங்கினர்.
அதனை தொடர்ந்து ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் நிலையம் வரை கோஷங்கள் எழுப்பி ஊர்வலமாக சென்று போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு மனு வழங்கினர்.
Related Tags :
Next Story