கட்டுமான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்


கட்டுமான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 3 Dec 2021 6:29 PM IST (Updated: 3 Dec 2021 6:29 PM IST)
t-max-icont-min-icon

விழுப்புரத்தில் கட்டுமான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

விழுப்புரம், 

விழுப்புரம் மாவட்ட கட்டுமான தொழிலாளர் சங்கம் (சி.ஐ.டி.யு.) சார்பில் நேற்று காலை விழுப்புரம் பழைய பஸ் நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கட்டிட கட்டுமான தொழிலாளர் அகில இந்திய சட்டம், மாநிலங்களுக்கிடையே இடம்பெயரும் தொழிலாளர் சட்டம், நலவரி சட்டங்களை எந்த சட்ட தொகுப்புடனும் இணைக்கக்கூடாது, கட்டுமான பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், ஜி.எஸ்.டி. வரிகளை குறைக்க வேண்டும், கட்டுமான தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரணம் வழங்க வேண்டும், ஓய்வூதியத்தை ரூ.3 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் முத்துக்குமரன் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத்தலைவர் குமார், மாவட்ட செயலாளர் பாலகிருஷ்ணன், பொருளாளர் முருகன், மாநிலக்குழு உறுப்பினர் ராஜி, டாஸ்மாக் ஊழியர் சங்க செயலாளர் கணபதி ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதில் கட்டுமான தொழிலாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Next Story