விலை உயர்ந்த மரங்கள் வெட்டி கடத்தல்


விலை உயர்ந்த மரங்கள் வெட்டி கடத்தல்
x
தினத்தந்தி 3 Dec 2021 7:56 PM IST (Updated: 3 Dec 2021 7:56 PM IST)
t-max-icont-min-icon

விலை உயர்ந்த மரங்கள் வெட்டி கடத்தல்

பந்தலூர்

பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட அய்யன்கொல்லி அருகே சன்னக்கொல்லி உள்ளது. இங்கு, முதுமலையில் வசிக்கும் மக்களுக்கு மாற்றிடம் வழங்கும் திட்டத்தின் கீழ் நிலம் ஒதுக்கப்பட்டு இருக்கிறது. பெரும்பாலானோர் முதுமலையில் இருந்து சன்னக்கொல்லிக்கு வந்துவிட்டனர். இந்த நிலையில் அந்த கிராமத்தில் இருந்த விலை உயர்ந்த 60-க்கும் மேற்பட்ட மரங்கள் அனுமதியின்றி வெட்டி அகற்றப்பட்டு உள்ளது. இதில் சில மரங்கள் கடத்தப்பட்டு உள்ளதாகவும் கூற்படுகிறது. 

இதுகுறித்து தகவல் அறிந்த பந்தலூர் தாசில்தார் குப்புராஜ், வருவாய் ஆய்வாளர் விஜயன், கிராம நிர்வாக அலுவலர் செந்தில்குமார், உதவியாளர் ராஜேந்திரன் மற்றும் அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது அனுமதியின்றி மரங்கள் வெட்டப்பட்டு உள்ளது உறுதியானது. மேலும் அங்கு கூடலூர் கோட்ட வன அலுவலர் கொம்மு ஓம்காரம் ஆய்வு செய்தார். மேலும் அவர் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்யவும், அதை கண்காணிக்காத வன ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் பிதிர்காடு வனத்துறைக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் வனச்சரகர்(பொறுப்பு) ராம்குமார் தீவிரவிசாரணை நடத்தி வருகிறார்.


Next Story