வங்கக்கடலில் புயல் சின்னம் எதிரொலி: கடலூர் துறைமுகத்தில் 2-ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
கடலூர் முதுநகர்,
வங்கக்கடலில் அந்தமான் அருகே நேற்று முன்தினம் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது. இதனால் கடலூர் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. இந்நிலையில் நேற்று மதியம் தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றது. இந்த புயலுக்கு ‘ஜாவத்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. தாழ்வு மண்டலம் புயலாக மாறியதையடுத்து கடலூர் துறைமுகத்தில் 1-ம் எண் கூண்டுக்கு பதிலாக, நேற்று மாலை 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. இது தூரத்தில் புயல் உருவாகி இருப்பதை குறிப்பதாகும். இதன் காரணமாக தமிழ்நாட்டிற்கு எந்தவித நேரடி பாதிப்பும் இருக்காது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story