ஆற்று கால்வாயில் தவறி விழுந்து விவசாயி பலி


ஆற்று கால்வாயில் தவறி விழுந்து விவசாயி பலி
x
தினத்தந்தி 3 Dec 2021 9:22 PM IST (Updated: 3 Dec 2021 9:22 PM IST)
t-max-icont-min-icon

களம்பூர் அருகே ஆற்று கால்வாயில் தவறி விழுந்து விவசாயி பரிதாபமாக இறந்தார்.

ஆரணி

திருவண்ணாமலை மாவட்டம் களம்பூரை அடுத்த அய்யம்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் பச்சையப்பன் (வயது 45), விவசாயி. 

இவர் கடந்த 3 ஆண்டுகளாக பக்க வாத நோயால் பாதிக்கப்பட்டு ஒரு கை, ஒரு கால் செயலிழந்து அவதிப்பட்டு வந்தார்.  இன்று வீட்டின் அருகில் உள்ள ஆற்றுக் கால்வாயில் இயற்கை உபாதை கழிக்கச் சென்றார். 

அங்கு அவர் திடீெரன ஆற்றுக் கால்வாயில் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். கழிப்பிடம் சென்ற பச்சையப்பன் ெவகுநேரம் ஆகியும் வீடு திரும்பாததால் மனைவி லட்சுமி ஆற்றுக் கால்வாய் பக்கம் சென்று பார்த்தார். அங்கு, பச்சையப்பன் ஆற்றுக் கால்வாயில் உயிரிழந்து கிடந்ததைப் பார்த்து கதறினார்.

இதுகுறித்து மனைவி லட்சுமி களம்பூர் போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் விநாயகம் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரித்து வருகிறார். 

ஆற்றுக்கால்வாயில் தவறி விழுந்து பலியான பச்சையப்பனுக்கு லோகேஷ் என்ற மகனும் சித்ரா, ரேணுகா என்ற மகள்களும் உள்ளனர்.

Next Story