மறியலில் ஈடுபட்ட சிஐடியுவினர் 115 பேர் கைது


மறியலில் ஈடுபட்ட சிஐடியுவினர் 115 பேர் கைது
x
தினத்தந்தி 3 Dec 2021 9:24 PM IST (Updated: 3 Dec 2021 9:24 PM IST)
t-max-icont-min-icon

மறியலில் ஈடுபட்ட சிஐடியுவினர் 115 பேர் கைது

திருப்பூர், 
திருப்பூர் மாவட்ட கட்டிட கட்டுமான தொழிலாளர் சங்கம் (சி.ஐ.டி.யு.) சார்பில் மறியல் போராட்டம் நேற்று காலை திருப்பூர் குமரன் சிலை முன் நடைபெற்றது. போராட்டத்துக்கு கட்டிட கட்டுமான தொழிலாளர் சங்க மாநில துணை தலைவர் குமார் தலைமை தாங்கினார். ஜி.எஸ்.டி. வரி குறைப்பு போன்ற நடவடிக்கைகள் மூலமாக கட்டுமான பொருட்களின் விலையை கட்டுப்படுத்த வேண்டும். தேங்கியுள்ள பணப்பலன்கள் கேட்பு மனுக்கள், பதிவு, புதுப்பித்தல் மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். நலவாரிய கூட்டத்தை 2 மாதங்களுக்கு ஒருமுறை நடத்த வேண்டும். கலெக்டர் தலைமையில் மாவட்ட கண்காணிப்புக்குழு கூட்டத்தை மாதந்தோறும் நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜெய்வாபாய் பள்ளி செல்லும் ரோட்டில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
பின்னர் மறியலில் ஈடுபட்ட 73 பெண்கள் உள்பட 115 பேரை திருப்பூர் வடக்கு போலீசார் கைது செய்து அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.


Next Story