முன்னெச்சரிச்சையாக ஒமைக்ரான் சிகிச்சை வார்டு அமைப்பு
திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் முன்னெச்சரிச்சை நடவடிக்கையாக ஒமைக்ரான் சிகிச்சை வார்டு அமைக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் முன்னெச்சரிச்சை நடவடிக்கையாக ஒமைக்ரான் சிகிச்சை வார்டு அமைக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தொற்றால் முதல் மற்றும் 2-வது அலையின் போது ஏராளமானோர் பாதிக்கப்பட்டனர்.
இதில் பலர் உயிரிழந்தனர். கொரோனா தொற்றில் இருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்து கொள்ள வீட்டில் இருந்து வெளியே வரும்போது கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும் என்றும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்றும் தொடர்ந்து அரசு தரப்பில் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று கொரோனா தொற்றால் 4 பேர் பாதிக்கப்பட்டனர். இதுவரை 55 ஆயிரத்து 206 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 54 ஆயிரத்து 484 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். 670 பேர் உயிரிழந்துள்ளனர். 52 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
இந்த நிலையில் ஒமைக்ரான் என்ற புதிய வைரஸ் வெளி நாட்டில் பரவ தொடங்கியதையடுத்து இந்தியாவில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன்படி சுகாதாரத்துறையின் உத்தரவின் பேரில் திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை வார்டு போன்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒமைக்ரான் சிகிச்சை வார்டும் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
இதில் ஒமைக்ரான் வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் தேவையான அடிப்படை வசதி மேற்கொள்ளும் பணியில் மருத்துவமனை அலுவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story