கோவில்பட்டியில் லோடு ஆட்டோவில் புகையிலை பொருட்கள் கடத்திய 2 பேர் கைது

கோவில்பட்டியில் லோடு ஆட்டோவில் புகையிலை பொருட்கள் கடத்திய  2 பேர் கைது
x
தினத்தந்தி 3 Dec 2021 9:30 PM IST (Updated: 3 Dec 2021 9:30 PM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டியில் லோடு ஆட்டோவில் புகையிலை பொருட்கள் கடத்திய 2 பேர் கைது

கோவில்பட்டி:
கோவில்பட்டி கிழக்கு போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சிலுவை அந்தோனி தலைமையில் போலீசார் நேற்று மாலையில் வாகனச் சோதனை நடத்தினர். அப்போது வந்த லோடு ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையில் ரூ. 2 லட்சம் மதிப்புள்ள 7 மூடை தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் கடத்தி சென்றது கண்டுபிடிக்கப் பட்டது.
இதைத்தொடர்ந்து புகையிலைப் பொருட்களை கடத்தி வந்ததாக கோவில்பட்டி சாஸ்திரி நகரைச் சேர்ந்த காமராஜ் மகன் கண்ணன் (வயது 29) மற்றும் கும்பகோணம், திருமணஞ்சேரி யைச் சேர்ந்த பசுபதி மகன் மோகன்ராஜ் (வயது 23) அகியோரை போலீசார் கைது செய்து, அவர்களிட மிருந்து ரூ.1 லட்சம் பணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story