புதிய மின்கம்பங்கள் அமைக்கும் பணி
புதிய மின்கம்பங்கள் அமைக்கும் பணி
உடுமலை,
உடுமலை நகராட்சியின் நூற்றாண்டு நினைவாக பல்வேறு வளர்ச்சித்திட்டப்பணிகளை மேற்கொள்வதற்கு அரசு சிறப்பு நிதி ஒதுக்கியுள்ளது. இந்த சிறப்பு நிதியில் நகராட்சி பகுதியில் முக்கிய இடங்கள், சாலையின் நடுவில் உள்ள மையத்தடுப்பு பகுதிகள் ஆகிய இடங்களில் புதிய மின்விளக்குகள் அமைக்கப்படுகிறது. இதில் மையத்தடுப்பு உள்ள பழனி சாலை, பொள்ளாச்சி சாலை ஆகிய சாலைகளில் மைய தடுப்புகளின் நடுவில் அமைக்கப்படும் மின் கம்பங்களில், இருபக்கமும் மின் விளக்குகள் உள்ளன. இதில் முதல்கட்டமாக மத்திய பஸ் நிலையத்திற்கு கிழக்கு பகுதியில் பழனிசாலையில் கொழுமம் சாலைப்பிரிவு வரை உள்ள மையத்தடுப்புகளின் நடுவில் இந்த புதிய மின்கம்பங்களை அமைக்கும் பணிகள் நேற்று நடந்தது. மின்கம்பங்கள் கிரேன் மூலம் தூக்கி மையத்தடுப்பின் நடுவில் நிறுத்தப்பட்டது.
Related Tags :
Next Story