ஓட்டப்பிடாரம் அருகே வள்ளிநாயகபுரம் கூட்டுறவு வங்கியில் நகைக்கடனில் ரூ1 கோடியே 98 லட்சம் மோசடி செய்தது தொடர்பாக தலைவர், செயலாளர் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்

ஓட்டப்பிடாரம் அருகே வள்ளிநாயகபுரம்  கூட்டுறவு வங்கியில் நகைக்கடனில் ரூ1 கோடியே 98 லட்சம் மோசடி செய்தது தொடர்பாக தலைவர், செயலாளர் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்
x
தினத்தந்தி 3 Dec 2021 9:51 PM IST (Updated: 3 Dec 2021 9:51 PM IST)
t-max-icont-min-icon

ஓட்டப்பிடாரம் அருகே வள்ளிநாயகபுரம் கூட்டுறவு வங்கியில் நகைக்கடனில் ரூ1 கோடியே 98 லட்சம் மோசடி செய்தது தொடர்பாக தலைவர், செயலாளர் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்

ஓட்டப்பிடாரம்:
ஓட்டப்பிடாரம் அருகே வள்ளிநாயகபுரம் கூட்டுறவு வங்கியில் நகைக்கடனில் ரூ.1.98 கோடி மோசடி செய்தது தொடர்பாக தலைவர், செயலாளர் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
கூட்டுறவு வங்கி
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள வள்ளிநாயகபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், கே.சண்முகபுரம் கிராமத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த கூட்டுறவு கடன் சங்கத்தில் தலைவராக சுப்புராஜ், செயலாளராக வேல்முருகன் இருந்து வருகின்றனர்.
இந்த சங்கத்தில் நகைக்கடனில் முறைகேடு நடந்திருப்பதாக கோவில்பட்டி கூட்டுறவு சங்க துணை பதிவாளருக்கு புகார் வந்தது. 
ரூ.1.98 கோடி மோசடி
இந்த புகாரின் அடிப்படையில் கோவில்பட்டி கூட்டுறவு சங்க துணை பதிவாளர் விசாரணை நடத்தினார். விசாரணையில், போலி நகைகளை வைத்தும், நகை திருப்பிய பணத்தை வங்கியில் செலுத்தாமலும், மேலும் அடமானம் இருப்பை குறைவாக காட்டியும் மோசடி செய்திருப்பது தெரியவந்தது. மொத்தம் ரூ.1 கோடியே 98 லட்சம் நகைக்கடனில் மோசடி நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுதொடர்பாக வள்ளிநாயகபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் சுப்புராஜ், செயலாளர் வேல்முருகன் உள்பட 9 பேர் மீது தூத்துக்குடி மாவட்ட வணிகவியல் குற்றப்பிரிவில் கூட்டுறவு சங்க துணை பதிவாளர் புகார் அளித்தார். 
தலைவர்-செயலாளர் கைது
அந்த புகாரின் அடிப்படையில் மாவட்ட வணிகவியல் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்திரகாளி வழக்குப்பதிவு செய்து சுப்புராஜ், வேல்முருகன் ஆகிய இருவரையும் கைது செய்தார்.
பின்னர் அவர்கள் நெல்லை மாவட்ட குற்றவியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஸ்ரீவைகுண்டம் சிறையில் அடைக்கப்பட்டனர். நகை மோசடிக்கு உடந்தையாக இருந்த மேலும் 7 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story