நர்சிங் கல்லூரி மாணவி காதலனுடன் தஞ்சம்


நர்சிங் கல்லூரி மாணவி காதலனுடன் தஞ்சம்
x
தினத்தந்தி 3 Dec 2021 9:59 PM IST (Updated: 3 Dec 2021 9:59 PM IST)
t-max-icont-min-icon

வடமதுரை போலீசில் பாதுகாப்பு கேட்டு நர்சிங் கல்லூரி மாணவி காதலுடன் தஞ்சம் அடைந்தார்.

வடமதுரை: 

வடமதுரை அருகே உள்ள கம்பிளியம்பட்டியை சேர்ந்தவர் விஷ்ணுபிரியா (வயது 19). இவர் திண்டுக்கல் அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில் டிப்ளமோ நர்சிங் படித்து வருகிறார். அதே ஊரை சேர்ந்தவர் பிரகாஷ்பாண்டி (25). இவர் பெங்களூருவில் உள்ள தனியார் ஐ.டி. நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இவர்கள் இருவரும் உறவினர்கள் என்பதால் அவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டு கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்தனர். இவர்களின் காதலுக்கு இரு தரப்பு பெற்றோரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் காதலர்கள் இருவரும் தங்கள் வீட்டை விட்டு வெளியேறி பழனியில் உள்ள திரு ஆவினன்குடி முருகன் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். அதன்பின்னர் பாதுகாப்பு கேட்டு காதல்ஜோடியினர் இருவரும் நேற்று வடமதுரை போலீசில் தஞ்சமடைந்தனர். போலீசார் இருதரப்பு பெற்றோரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் பிரகாஷ்பாண்டியின் பெற்றோர் மணமக்களை ஏற்றுக் கொண்டதால், போலீசார் மணமக்களை அவர்களுடன் அனுப்பி வைத்தனர்.

Next Story