பனியன் நிறுவன அதிபர் போக்சோ சட்டத்தில் கைது


பனியன் நிறுவன அதிபர் போக்சோ சட்டத்தில்  கைது
x
தினத்தந்தி 3 Dec 2021 10:01 PM IST (Updated: 3 Dec 2021 10:01 PM IST)
t-max-icont-min-icon

பனியன் நிறுவன அதிபர் போக்சோ சட்டத்தில் கைது

வீரபாண்டி, 
திருப்பூர் முருகம்பாளையம் முத்து நகர் பகுதியைச் சேர்ந்த சரவணன் (வயது 33). இவர் அதே பகுதியில் பனியன் நிறுவனம் நடத்தி வருகிறார். இந்த நிலையில் சரவணன்   16 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி பலமுறை சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. 
இந்த நிலையில் நேற்று முன்தினம் அந்த சிறுமிக்கு வயிற்று வலி ஏற்படவே பெற்றோர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சோதனை செய்ததில் சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து பெற்றோர் விசாரித்தபோது சிறுமி  நடந்ததை நடந்ததை தெரிவித்துள்ளார். உடனே பெற்றோர் திருப்பூர் தெற்கு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசாரிடம் தகவல் தெரிவித்தனர். அடிப்படையில் அனைத்து மகளிர்  போலீசார் சரவணன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

Next Story