மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதி ஊழியர் பலி
மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதி ஊழியர் பலி
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை அருகே உள்ள அம்மூர் பகுதியை சேர்ந்தவர் செல்வம் (வயது 34). இவர் சிப்காட்டில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் வயர் மேனாக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் இரவு அம்மூரில் இருந்து அருகே உள்ள எடப்பாளையம் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி சாலையோரத்தில் உள்ள மின்கம்பத்தில் மோதியது.
இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த செல்வம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த ராணிப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிணத்தை கைப்பற்றி வாலாஜா அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story