விஷம் குடித்து ஆசிரியர் தற்கொலை
விஷம் குடித்து ஆசிரியர் தற்கொலை செய்து கொண்டாா்.
விழுப்புரம்,
விழுப்புரம் சாலாமேடு பகுதியை சேர்ந்தவர் நாகராஜ் மகன் சங்கரநாதன் (வயது 36). இவருக்கும் சங்கீதா (31) என்பவருக்கும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். சங்கரநாதன், திருவெண்ணெய்நல்லூர் அருகே பேரங்கியூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சங்கரநாதன், விஷத்தை எடுத்து குடித்து விட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இறந்து விட்டார். இவரின் தற்கொலைக்கான காரணம் குறித்து விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story