‘தினத்தந்தி’ புகார் பெட்டி


‘தினத்தந்தி’ புகார் பெட்டி
x
தினத்தந்தி 3 Dec 2021 10:11 PM IST (Updated: 3 Dec 2021 10:11 PM IST)
t-max-icont-min-icon

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகளை பார்க்கலாம்.

திண்டுக்கல் : 

புதர்மண்டி கிடக்கும் சுகாதார வளாகம் 
சத்திரப்பட்டி அருகே கொத்தயம் கிராமத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு மழைநீர் தேங்கி நிற்கிறது. மேலும் கட்டிடத்தை சுற்றிலும் செடி-கொடிகள் வளர்ந்து புதர்மண்டிய நிலையில் உள்ளது. இதனால் நோயாளிகள் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு செல்ல முடியாமல் தவிக்கின்றனர். எனவே கட்டிடத்தை சுற்றியுள்ள புதர்களை அகற்றுவதுடன், மழைநீரை வெளியேற்றவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-குமார், பழனி.

தெரு விளக்குகள் சீரமைக்கப்படுமா?
பெரியகுளம் தாலுகா சில்வார்பட்டியில் அரசு மேல்நிலைப்பள்ளி பகுதியில் உள்ள மின்கம்பங்களில் பொருத்தப்பட்டுள்ள தெரு விளக்குகள் பழுதடைந்த நிலையில் உள்ளன. இதனால் அப்பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதன் காரணமாக பெண்கள் இரவில் வீட்டைவிட்டு வெளியே வர அச்சப்படுகின்றனர். எனவே பழுதடைந்த தெரு விளக்குகளை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மணிகண்டன், சில்வார்பட்டி.

சிதிலமடைந்து வரும் மின்கம்பம் 
திண்டுக்கல் வாழக்காய்பட்டி பிரிவு முத்தமிழ்நகரில் உள்ள மின்கம்பம் சேதமடைந்து வருகிறது. மின்கம்பத்தின் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து கட்டுமான கம்பிகள் வெளியே தெரிகின்றன. இதனால் எப்போது வேண்டுமானாலும் மின்கம்பம் முறிந்து விழும் அபாயம் உள்ளது. எனவே சிதிலமடைந்து வரும் மின்கம்பத்தை மாற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சிவசக்தி, முத்தமிழ்நகர்.

ஓடை, குளங்களில் ஆக்கிரமிப்பு
வேடசந்தூர் தாலுகா ஏ.சித்தூரில் உள்ள ஓடைகள், குளங்களின் நீர்வழிப்பாதைகளை சிலர் ஆக்கிரமித்துள்ளனர். இதனால் மழைக்காலத்தில் ஓடைகள், குளங்களுக்கு தண்ணீர் வருவதில்லை. எனவே ஆக்கிரமிப்புகளை அகற்றுவதுடன் நீர்வழிப்பாதைகளை தூர்வாரவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-குமரேசன், சித்தூர்.


சாலையோரத்தில் கொட்டப்படும் குப்பைகள் 
திண்டுக்கல் மக்கான்தெருவில் குப்பை தொட்டி வைக்கப்படாததால் சாலையோரத்தில் குப்பைகளை கொட்டிச்செல்கின்றனர். இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதாரக்கேடும் ஏற்பட்டுள்ளது. மேலும் குப்பை கழிவுகளை மாடுகளும் வந்து மேய்ந்து செல்கின்றன. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. எனவே மக்கான் தெருவில் குப்பை தொட்டிகளை வைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-உமர், மக்கான்தெரு.

Next Story