வாடகை செலுத்தாததால் 14 கடைகளுக்கு சீல்


வாடகை செலுத்தாததால் 14 கடைகளுக்கு சீல்
x
தினத்தந்தி 3 Dec 2021 10:14 PM IST (Updated: 3 Dec 2021 10:14 PM IST)
t-max-icont-min-icon

திண்டிவனத்தில் வாடகை செலுத்தாததால் 14 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.

திண்டிவனம், 

திண்டிவனம் செஞ்சி ரோடு, நேரு வீதி, சேர்மன் வைத்திலிங்கம் காய்கறி நாளங்காடி, ஓ.பி.ஆர். பூங்கா ஆகிய பகுதியில் நகராட்சிக்கு சொந்தமாக 75 கடைகள் உள்ளன. இந்த கடைகளுக்கு ஒவ்வொரு மாதமும் நகராட்சியால் வாடகை வசூலிக்கப்பட்டு வருகிறது. இதில் சில கடை வியாபாரிகள் நகராட்சிக்கு வாடகை செலுத்தாமல் இருந்து வந்தனர்.  எனவே வாடகை செலுத்தாத கடைகளுக்கு சீல் வைக்க ஆணையாளர் சவுந்தர்ராஜன் உத்தரவிட்டார். அதன்படி 14 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.  இது தொடர்பாக ஆணையாளர் சவுந்தர்ராஜன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், நகராட்சிக்கு சொந்தமான கடைகளுக்கு இதுவரை வாடகை பாக்கி செலுத்த வேண்டும். நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி தொகை ரூ.8 கோடிய 6 லட்சம், தொழில் வரி ரூ.1 கோடியே 13 லட்சம், குடிநீர் கட்டணம் ரூ.76 லட்சம் ஆக மொத்தம் ரூ.9 கோடியே 95 லட்சத்தில், இதுவரையில் ரூ.1 கோடியே 65 லட்சம் மட்டுமே வசூலிக்கப்பட்டுள்ளது. எனவே, நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி, தொழில்வரி மற்றும் குடிநீர் கட்டணம் ஆகியவற்றை செலுத்தாதவர்கள் வரித்தொகையினை நகராட்சிக்கு செலுத்தாதபட்சத்தில் ஜப்தி மற்றும் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும். மேலும் அதிக நிலுவை வைத்துள்ளவர்கள் மீது நீதிமன்றத்தில் குற்றவியல் வழக்கு தொடரப்படும் என்று கூறப்பட்டுள்ளது. 

Next Story