செங்குன்றத்தில் இருந்து ஆந்திராவுக்கு லாரியில் கடத்த முயன்ற 25 டன் ரேஷன் அரிசி பறிமுதல்


செங்குன்றத்தில் இருந்து ஆந்திராவுக்கு லாரியில் கடத்த முயன்ற 25 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
x
தினத்தந்தி 3 Dec 2021 10:21 PM IST (Updated: 3 Dec 2021 10:21 PM IST)
t-max-icont-min-icon

செங்குன்றத்தில் இருந்து ஆந்திராவுக்கு லாரியில் கடத்த முயன்ற 25 டன் ரேஷன் அரிசி பறிமுதல்.

செங்குன்றம்,

செங்குன்றத்தில் இருந்து ஆந்திர மாநிலத்துக்கு லாரியில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக உணவு வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை இன்ஸ்பெக்டர் முகேஷ்ராவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் செங்குன்றத்தை அடுத்த வடகரை எம்.ஜி.ஆர். சிலை அருகே உள்ள ஒரு குடோனில் சோதனை செய்தனர். மேலும் அங்கு நிறுத்தி இருந்த லாரியையும் சோதனை செய்தனர்.

அதில் அந்த லாரியில் ஆந்திராவுக்கு கடத்துவதற்காக 25 டன் ரேஷன் அரிசி மூட்டைகள் அடுக்கி வைத்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது சம்பந்தமாக சண்முகம், சிவகுமார், ரூபேஷ்குமார், ராகுல், தனுஜன் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

விசாரணையில் செங்குன்றம் மற்றும் சுற்று வட்டாரத்தில் உள்ள ரேஷன் கடைகளில் இருந்து அரிசியை வாங்கி, அவற்றை செங்குன்றத்தில் உள்ள அரிசி ஆலையில் பாலிஷ் செய்து ஆந்திர மாநிலத்துக்கு கடத்திச்சென்று கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வந்தது தெரிந்தது. லாரியுடன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார், கைதான 5 பேரிடமும் விசாரித்து வருகின்றனர்.

Next Story