பள்ளிக்கூட வேன் சக்கரத்தில் சிக்கி 1½ வயது குழந்தை பலி


பள்ளிக்கூட வேன் சக்கரத்தில் சிக்கி 1½ வயது குழந்தை பலி
x
தினத்தந்தி 3 Dec 2021 10:25 PM IST (Updated: 3 Dec 2021 10:25 PM IST)
t-max-icont-min-icon

பள்ளிக்கூட வேன் சக்கரத்தில் சிக்கி 1½ வயது குழந்தை உயிரிழந்தது. அந்த வேனில் வந்த மகனை அழைத்துச் செல்ல வந்த இடத்தில், தனது 2வது குழந்தையை பெண் பறிெகாடுத்தார்.

பனைக்குளம்,
பள்ளிக்கூட வேன் சக்கரத்தில் சிக்கி 1½ வயது குழந்தை உயிரிழந்தது. அந்த வேனில் வந்த மகனை அழைத்துச் செல்ல வந்த இடத்தில், தனது 2-வது குழந்தையை பெண் பறிெகாடுத்தார்.
இந்த துயர சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
4-ம் வகுப்பு மாணவன்
ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி யூனியன் அலுவலகம் அருகில் நேசனல் அகாடமி பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 4-ம் வகுப்பு படிக்கும் மாணவ-மாணவிகளை பள்ளி முடிந்து ஏற்றிக் கொண்டு அகஸ்தியர்கூட்டம் கிராமத்துக்கு, அந்த பள்ளி வேன் சென்றுள்ளது. உச்சிப்புளியை சேர்ந்த டிரைவர் கோபி, வேனை ஓட்டிச் சென்றார். 
அங்கு மாணவன் தர்ஷனை வேனில் இருந்து இறக்கிவிட்டுள்ளனர். அப்போது மாணவனின் தாய் தனது 1½ வயது பெண் குழந்தை  அபி சகிகாவுடன் வந்துள்ளார்.
பரிதாபம்
வேனில் இருந்து மகன் இறங்கிய போது, தனது 2-வது குழந்தையை கீழே இறக்கிவிட்டுள்ளார். அந்த குழந்தை அண்ணனை பார்த்தபடி வேனின் சக்கரத்தின் அருகில் சென்றுள்ளது. 
அப்போது, டிரைவர் திடீரென வேனை இயக்கி உள்ளார். இதில் 1½ வயது குழந்தை சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது. இதைபார்த்து குழந்தையின் தாய், அண்ணன் அலறினர். கதறி அழுதனர்.
இதுபற்றிய தகவல் அறிந்து உச்சிப்புளி போலீசார் விரைந்து வந்து குழந்தையின் உடலை கைப்பற்றி ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து டிரைவர் கோபியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story