கந்தம்பாளையம் அருகே மோட்டார்சைக்கிள்கள் மோதல்; சிவில் என்ஜினீயர் பலி ஒருவர் படுகாயம்
கந்தம்பாளையம் அருகே மோட்டார்சைக்கிள்கள் மோதல்; சிவில் என்ஜினீயர் பலி ஒருவர் படுகாயம்
கந்தம்பாளையம்:
கந்தம்பாளையம் அருகே மோட்டார்சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி கொண்ட விபத்தில் சிவில் என்ஜினீயர் பலியானார். ஒருவர் படுகாயம் அடைந்தார்.
சிவில் என்ஜினீயர்
நாமக்கல் மாவட்டம் கந்தம்பாளையம் அருகே உள்ள வசந்தபுரம் என்.ஜி. நகரை சேர்ந்தவர் கந்தசாமி. இவருடைய மகன் பிரகாஷ் (வயது 29). சிவில் என்ஜினீயரான இவர் வெளிநாட்டில் வேலை செய்து வந்தார். பின்னர் கொரோனா ஊரடங்கு மற்றும் தடுப்பு நடவடிக்கை காரணமாக சொந்த ஊருக்கு வந்த பிரகாஷ் பின்னர் வெளிநாட்டுக்கு செல்லாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் அவருக்கு திருமணமாகவில்லை,
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பிரகாஷ் மோட்டார்சைக்கிளில் குன்னமலை சென்று கொண்டிருந்தார். அந்தசமயம் தொட்டியந்தோட்டத்தை சேர்ந்த ஜெகதீசன் (34) என்பவர் கந்தம்பாளையம் செல்வதற்காக மோட்டார்சைக்கிளில் வந்தார். அப்போது அப்போது குன்னமலை சமத்துவபுரம் 4 ரோடு பகுதியில் சென்றபோது கண்இமைக்கும் நேரத்தில் 2 மோட்டார்சைக்கிள்களும் நேருக்கு நேர் ேமாதி விபத்துக்குள்ளானது.
விசாரணை
இந்த விபத்தில் கீழே விழுந்து பலத்த காயம் அடைந்த பிரகாஷ் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார். படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய ஜெகதீசனை அந்த வழியாக மீட்டு சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற நல்லூர் போலீசார் இறந்த பிரகாசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story