நாமக்கல் மாவட்டத்தில், இன்று 513 முகாம்களில் 1 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு கலெக்டர் ஸ்ரேயா சிங் தகவல்


நாமக்கல் மாவட்டத்தில், இன்று 513 முகாம்களில் 1 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு கலெக்டர் ஸ்ரேயா சிங் தகவல்
x
தினத்தந்தி 3 Dec 2021 10:43 PM IST (Updated: 3 Dec 2021 10:43 PM IST)
t-max-icont-min-icon

நாமக்கல் மாவட்டத்தில், இன்று 513 முகாம்களில் 1 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு கலெக்டர் ஸ்ரேயா சிங் தகவல்

நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்தில் இன்று 513 முகாம்களில் 1 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் ஸ்ரேயா சிங் தெரிவித்துள்ளார்.
513 முகாம்கள்
நாமக்கல் மாவட்டத்தில் இன்று (சனிக்கிழமை) 13-ம் கட்ட மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெற உள்ளது. அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், ஊட்டச்சத்து மையங்கள், அரசு பள்ளிகள் என 472 இடங்கள் மற்றும் 41 நடமாடும் குழுக்கள் என மொத்தம் 513 முகாம்கள் மூலம் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. இந்த முகாம்கள் மூலம் 1 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
அதற்கான அறிவிப்பை நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் வெளியிட்டு உள்ளார். அதில் மாவட்டம் முழுவதும் 210 டாக்டர்கள், 430 செவிலியர்கள், 1,400 ஆசிரியர்கள், 1,600 அங்கன்வாடி பணியாளர்கள், 1,400 தன்னார்வலர்கள், 415 பயிற்சி செவிலியர்கள் மற்றும் 265 பயிற்சி சுகாதார ஆய்வாளர்கள் தடுப்பூசி முகாம் பணிகளில் ஈடுபட உள்ளதாக அவர் கூறினார்.
கொரோனா தடுப்பூசி
கொரோனா நோய்த்தொற்று முழுமையாக ஒழியவில்லை என்பதை உணர்ந்து, தடுப்பூசி செலுத்தாமல் உள்ளவர்கள் அரசு அளிக்கிற கொரோனா தடுப்பூசியை செலுத்தி கொள்ள முன்வர வேண்டும் என கலெக்டர் கேட்டு கொண்டுள்ளார்.
நாமக்கல் மாவட்டத்தில் 10 லட்சத்து 17 ஆயிரத்து 866 பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும், 5 லட்சத்து 72 ஆயிரத்து 788 பேருக்கு 2-ம் தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டு உள்ளது. அதேபோல் இதுவரை மாவட்டத்தில் 12 கட்டமாக நடத்தப்பட்ட மாபெரும் தடுப்பூசி முகாம்களில் மட்டும் 4 லட்சத்து 74 ஆயிரத்து 471 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story