வாலிபரை மிரட்டியவர் மீது வழக்கு


வாலிபரை மிரட்டியவர் மீது வழக்கு
x
தினத்தந்தி 3 Dec 2021 10:46 PM IST (Updated: 3 Dec 2021 10:46 PM IST)
t-max-icont-min-icon

வாலிபரை மிரட்டியவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

தொண்டி, 
தொண்டி அருகே உள்ள நம்புதாளையை சேர்ந்தவர் கன்சுல் மகரிபா (வயது61). இவர் அங்குள்ள வங்கி அருகே நின்று கொண்டிருந்தாரம். அப்போது பல்லாக்கு ஒலியுல்லா தெருவை சேர்ந்த கருப்பையா மகன் பிரேம் குமார் (24) என்பவர் ஓட்டி சென்ற மோட்டார்சைக்கிள் கன்சுல் மகரிபா மீது மோதியது. இதில் அவர் படுகாயம் அடைந்தார். இதனை பார்த்த தொண்டி வெள்ளை மணல் தெருவை சேர்ந்த பாஷா உசேன் (27) என்பவர் தட்டிக் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பிரேம்குமார் கையில் வைத்திருந்த கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்ததுடன் அவரிடம் இருந்து ரூ.200- ஐ பறித்து சென்றதாக பாஷா உசேன் தொண்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் மீது வழக்குப்பதிவு செய்து கத்தி மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.

Next Story