மாவட்ட செய்திகள்

குடியிருப்பு பகுதியில் தேங்கும் கழிவுநீர்; தோகைமலை-பாளையம் சாலையில் பொதுமக்கள் மறியல் + "||" + Road block

குடியிருப்பு பகுதியில் தேங்கும் கழிவுநீர்; தோகைமலை-பாளையம் சாலையில் பொதுமக்கள் மறியல்

குடியிருப்பு பகுதியில் தேங்கும் கழிவுநீர்; தோகைமலை-பாளையம் சாலையில் பொதுமக்கள் மறியல்
குடியிருப்பு பகுதியில் கழிவுநீர் தேங்கியதால் அதிருப்தி அடைந்த பொதுமக்கள் தோகைமலை-பாளையம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தோகைமலை, 
கழிவுநீர்
தோகைமலை அருகே உள்ள கம்பத்தான்பாறை ரோட்டில் இருந்து செல்லும் கழிவுநீர் காலனி வழியாக நாகனூர் பகவதி அம்மன் கோவில், காளியம்மன் கோவில் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் தேங்கி வருகிறது. இதனால் அப்பகுதி மக்கள் சிரமம் அடைந்து வருகிறார்கள். 
இதையடுத்து, இப்பகுதியில் சாக்கடை வசதி ஏற்படுத்தி தரக்கோரி கடந்த 1-ந் தேதி வார்டு உறுப்பினர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் வார்டு உறுப்பினர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில், உடன்பாடு ஏற்பட்டதால் உண்ணாவிரதம் கைவிடப்பட்டது.
சாலை மறியல்
இந்தநிலையில் அதிகாரிகள் உறுதியளித்தபடி எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் அதிருப்தி அடைந்த அப்பகுதி மக்கள் தோகைமலை-பாளையம் சாலையில் நேற்று காலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த வழியாக வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த தோகைமலை துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ரவி, ஒன்றிய அதிகாரிகள் மற்றும் தோகைமலை இன்ஸ்பெக்டர் ராஜ்குமார், சப்-இன்ஸ்பெக்டர் திருப்பதி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதில் சமாதானம் அடையாத பொதுமக்கள் தொடர்ந்து மறியலில் ஈடுபட்டனர். 
அமைதி பேச்சுவார்த்தை
இதையடுத்து, குளித்தலை ஆர்.டி.ஓ. புஷ்பாதேவி, போலீஸ் துணை சூப்பிரண்டு ஸ்ரீதர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் காலனி வழியாக தோகைமலை மெயின் ரோட்டில் தற்காலிகமாக கால்வாய் வெட்டி கழிவுநீர் கொண்டு செல்ல நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் அதற்கு காலனி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், இப்பகுதியில் சாக்கடை அமைத்து கழிவுநீர் வெளியேற்ற வேண்டும் என கூறினர்.
இதனைதொடர்ந்து கழிவு நீர் கொண்டு செல்வது தொடர்பாக குளித்தலை ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் நாகனூர் மற்றும் காலனி மக்கள் இடையே அமைதி பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்யப்பட்டது. இதில் சமாதானம் அடைந்த பொதுமக்கள் தங்களுடைய போராட்டத்தை கைவிட்டனர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

1. பண்ருட்டியில் சாலையை சீரமைக்க கோரி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் 2 இடங்களில் மறியல்
பண்ருட்டியில் சாலையை சீரமைக்க கோரி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் 2 இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
2. திருச்சியில் 4 இடங்களில் சாலை மறியல்
திருச்சியில் 4 இடங்களில் சாலை மறியல் நடைபெற்றது.
3. பெண்கள் திடீர் சாலை மறியல்
ஆலங்குளம் அருகே பெண்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
4. ஜெயங்கொண்டம் அருகே கோவில் கும்பாபிஷேகம் நடத்த அனுமதி மறுப்பு; கிராம மக்கள் சாலை மறியல்
ஜெயங்கொண்டம் அருகே கோவில் கும்பாபிஷேகம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
5. கிராம மக்களுடன் சேர்ந்து ம.தி.மு.க. எம்.எல்.ஏ. திடீர் மறியல்
ரேஷன் கடை ஆய்வின் போது கிராம மக்களுடன் இணைந்து ம.தி.மு.க. எம்.எல்.ஏ. டாக்டர் ரகுராமன் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார்.