‘தினத்தந்தி’ புகார் பெட்டி


‘தினத்தந்தி’ புகார் பெட்டி
x
தினத்தந்தி 3 Dec 2021 7:08 PM GMT (Updated: 3 Dec 2021 7:08 PM GMT)

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

மாடுகளால் போக்குவரத்து பாதிப்பு
திருச்சி எல்.ஐ.சி. காலனி மெயின் ரோட்டில் சகஜமாக சுற்றித்திரியும் மாடுகளால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. இதேபோல் திருச்சி மேலசிந்தாமணி மாதுளங்கொள்ளை அக்ராஹரம் பகுதியில் மாடுகள் தெருக்களில் சுற்றித்திரிவதால் அந்த வழியாக செல்வோர் அச்சம் அடைந்து வருகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் மாடுகளை சாலையில் சுற்றித்திரிய விடும் அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும்.
விக்னேஷ்வரன், திருச்சி.
குப்பைகளால் சுகாதார சீர்கேடு
திருச்சி மாவட்டம் ராமசந்திரா நகரில் சாலையோரம் குப்பைகள் கொட்டப்படுகிறது. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு நிலவி வருகிறது. மேலும் அந்த வழியாக செல்வோர் மிகவும் சிரமம் அடைந்து வருகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இப்பகுதியில் குப்பை தொட்டி வைப்பதுடன், அதனை உடனுக்குடன் அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
லோகு, திருச்சி.
சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்
திருச்சி- புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலை பணிகள் ஆமை வேகத்தில் நடைபெறுவதால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் சிரமம் அடைந்து வருகிறார்கள். இரவு நேரங்களில் அந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகிறார்கள். மேலும், மாடுகள் ரோட்டில் நடமாடுவது அதிகமாக உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சாலை பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விட வேண்டும்.
பால்சாமி, குண்டூர் பர்மா காலனி, திருச்சி.
பள்ளியில் சுகாதார சீர்கேடு
திருச்சி மாவட்டம் திருவரம்பூர் ஒன்றியத்தை சேர்ந்த திருநெடுங்குளம் 3-வது வார்டு தேவராயநேரியில் உள்ள அரசு பள்ளியில் சில நபர்கள் மாடுகளை கட்டி வைத்து உள்ளனர். இதனால் பள்ளியில் சுகாதார சீர்கேடு நிலவி வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சாந்தி, தேவராயநேரி, திருச்சி.


Next Story