மாவட்ட செய்திகள்

உயர் மின் கோபுரத்தில் ஏறி விவசாயிகள் போராட்டம் + "||" + Struggle

உயர் மின் கோபுரத்தில் ஏறி விவசாயிகள் போராட்டம்

உயர் மின் கோபுரத்தில் ஏறி விவசாயிகள் போராட்டம்
விருதுநகர் அருேக செல்போன் கோபுரத்தில் ஏறி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விருதுநகர்,
விருதுநகர் அருகே மீசலூரில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் விவசாயிகள் போராட்டக் குழு மற்றும் விவசாயிகள் நாராயணசாமி நாயுடு நலச்சங்கம் ஆகிய அமைப்புகளின் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி உயர் மின் கோபுரத்தில் ஏறி போராட்டம் நடத்தினர். விருதுநகரில் இருந்து திருவண்ணாமலை வரை 765 கிலோவாட் மின் பாதை அமைக்கும் பணியை ஐகோர்ட்டு உத்தரவுபடி நிறுத்தி வைக்க வேண்டும். உயர் மின் கோபுரம் அமைக்கும் இடத்தில் 200 சதவீத இழப்பீடு மின்கம்பி செல்லும் பாதையில் 100 சதவீத இழப்பீடு, பாதிக்கப்பட்ட மரங்களுக்கு அரசு ஆணையின் படி இழப்பீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்த போராட்டம் நடத்தப்பட்டது. விவசாயிகள் பாதுகாப்பு சங்கத் தலைவர் ஈசன் தலைமையில் நடந்த இந்த போராட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.


தொடர்புடைய செய்திகள்

1. விதிகள் மீறப்படுவதாக ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் போராட்டம்
நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள் கலந்தாய்வில் அரசு விதிகள் மீறப்படுவதாக ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் போராட்டம் நடத்தினர்.
2. சாலை பணியாளர்கள் தர்ணா போராட்டம்
சாலை பணியாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
3. விருத்தாசலம் அருகே விஷம் குடித்து சர்வேயர் மனைவி தற்கொலை உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்
விருத்தாசலம் அருகே விஷம் குடித்து சர்வேயர் மனைவி தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்
4. கலெக்டர் அலுவலகம் முன்பு பொதுமக்கள் போராட்டம்
என்.எல்.சி. நிர்வாகத்தை கண்டித்து கலெக்டர் அலுவலகம் முன்பு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
5. ரேஷன் கார்டுகளை சாலையில் வீசி கிராம மக்கள் போராட்டம்
வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி கலெக்டர் அலுவலகம் முன்பு ரேஷன் கார்டுகளை சாலையில் வீசி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.