நகை திருட்டு வழக்கில் 2 பேர் கைது


நகை திருட்டு வழக்கில் 2 பேர் கைது
x
தினத்தந்தி 4 Dec 2021 1:15 AM IST (Updated: 4 Dec 2021 1:15 AM IST)
t-max-icont-min-icon

ராஜபாளையத்தில் நகை திருட்டு வழக்கில் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

ராஜபாளையம், 
ராஜபாளையம் - முடங்கியார் சாலையில் உள்ள ஞானசம்பந்தர் தெருவில் வசித்து வருபவர் சுபஸ்ரீ. இவர் வீட்டில் தனியாக இருந்த நிலையில் வாலிபர் ஒருவர் விலாசம் விசாரிப்பது போல் சென்று சுபஸ்ரீ கழுத்தில் இருந்த 5 பவுன் செயினை பறிக்க முயன்றார். உடனே அவர் சத்தம் போட்டதால் அந்த வாலிபர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இதுகுறித்து  வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் 21 வயது மாணவன் ஒருவன் நகை பறிக்க முயன்றது தெரியவந்தது. இதையடுத்து அந்த மாணவனை போலீசார் கைது செய்தனர். அதேபோல ராஜபாளையத்தில் இனிப்பு கடை நடத்தி வரும் வளர்மதி என்பவரின் வீட்டில் 17 பவுன் நகையை திருடி சென்றனர். இந்த வழக்கில் திருவள்ளூர் தெருவை சேர்ந்த காமராஜ் (46) என்பவரை கைது செய்தனர். இவர் வளர்மதி கடையில்  டீ மாஸ்டராக வேலை பார்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story