மதுரையில் பொது இடங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே அனுமதி-கலெக்டர் அனிஷ்சேகர் அறிவிப்பு


மதுரையில் பொது இடங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே அனுமதி-கலெக்டர் அனிஷ்சேகர் அறிவிப்பு
x
தினத்தந்தி 4 Dec 2021 1:21 AM IST (Updated: 4 Dec 2021 1:21 AM IST)
t-max-icont-min-icon

ரேஷன்-டாஸ்மாக் கடை, தியேட்டர் உள்ளிட்ட பொது இடங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என்று மதுரை கலெக்டர் அனிஷ்சேகர் அறிவித்துள்ளார்.

மதுரை,

ரேஷன்-டாஸ்மாக் கடை, தியேட்டர் உள்ளிட்ட பொது இடங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என்று மதுரை கலெக்டர் அனிஷ்சேகர் அறிவித்துள்ளார்.

ஓட்டல்கள்

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணியினை தீவிரப்படுத்த சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. தடுப்பூசி போடுவதில் சென்னை, கோவை, கடலூர், திருச்சி, திருப்பூர் மாவட்டங்களை தொடர்ந்து மதுரை மாவட்டம் உள்ளது. எனவே மாவட்டத்தில் தடுப்பூசி போடும் பணியினை துரிதப்படுத்த கலெக்டர் அனிஷ் சேகர் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். அதன்படி தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே பொது இடங்களுக்கு சென்று வர அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும். தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு பொது இடங்களில் இனி அனுமதிக்கப்பட மாட்டார்கள். அதன்படி ரேஷன் கடைகள், டாஸ்மாக் கடைகள், தியேட்டர்கள், பூங்காக்கள், வணிக வளாகங்கள், ஓட்டல்கள், கேளிக்கை விடுதிகள், வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகள், கல்வி நிலையங்கள், திருமண மண்டபங்கள் உள்பட அனைத்து பொது இடங்களுக்கும் வருபவர்கள் கட்டாயம் ஒரு டோஸ் தடுப்பூசியாவது செலுத்தி இருக்க வேண்டும்.

சிறப்பு முகாம்கள்

இது குறித்து உரிய முறையில் ஆய்வு செய்யப்படும். தடுப்பூசி செலுத்தாதவர்கள் சம்பந்தப்பட்ட இடங்களுக்கு வந்தால் அவர்கள் உடனடியாக திருப்பி அனுப்பப்படுவார்கள். நாளையும் (இன்று), அடுத்த வாரம் சனிக்கிழமையும் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடக்கிறது. இந்த முகாமை பயன்படுத்தி இதுவரை தடுப்பூசி செலுத்தாதவர்கள் செலுத்தி கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story