கொள்ளிடம் ஆற்றில் ஆண் பிணம்
கொள்ளிடம் ஆற்றில் ஆண் ஒருவர் பிணமாக கிடந்தார்.
கீழப்பழுவூர்:
திருமானூர் அருகே கீழவரப்பன்குறிச்சி கொள்ளிடம் ஆற்றில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பிணமாக கிடந்தார். அவரது உடல் அழுகிய நிலையில் இருந்தது. இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் ராயர் கொடுத்த புகாரின்பேரில் தூத்தூர் போலீசார் அங்கு வந்து அந்த ஆணின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இறந்து கிடந்தவர் அவர் சட்டை, பேண்ட் அணிந்திருந்தார். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? எப்படி இறந்தார்? என்பது குறித்த விவரம் உடனடியாக தெரியவில்லை. இதையடுத்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து அவர் கொலை செய்யப்பட்டாரா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story