மாயமான சமையல் தொழிலாளி ஆற்றில் அடித்து செல்லப்பட்டாரா?
மாயமான சமையல் தொழிலாளி ஆற்றில் அடித்து செல்லப்பட்டிருக்கலாம் என்று கருதி தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக தேடினர்.
வேப்பந்தட்டை:
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள நெற்குணம் கிராமத்தைச் சேர்ந்தவர் காளிமுத்து(வயது 46). சமையல் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கடந்த 1-ந் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற காளிமுத்து மீண்டும் வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவரை உறவினர்கள் வீடு உள்பட பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதனைத் தொடர்ந்து காளிமுத்துவின் மகள் மாரியம்மாள் நேற்று கை.களத்தூர் போலீசில் புகார் செய்தார்.
அதில், தனது தந்தை காளிமுத்து அருகில் உள்ள வெண்பாவூர் கல்லாறு பகுதிக்கு சென்றதாக கூறியிருந்தார். இதையடுத்து பெரம்பலூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து வெண்பாவூர் கல்லாற்று தண்ணீரில் காளிமுத்து அடித்து செல்லப்பட்டாரா? என்று தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டனர். ஆனால் அவர் கிடைக்கவில்லை. தொடர்ந்து காளிமுத்துவை தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story