இடப்பிரச்சினையில் கோஷ்டி மோதல்; பெண்கள் உள்பட 11 பேர் மீது வழக்கு
இடப்பிரச்சினையில் கோஷ்டி மோதல் தொடர்பாக பெண்கள் உள்பட 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
தா.பழூர்:
தாக்குதல்
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள மேலசிந்தாமணி கிராமத்தை சேர்ந்தவர்கள் வீரமணி(வயது 56), வைத்திலிங்கம்(83). இவர்களுக்கு இடையே இடப்பிரச்சினை இருப்பதாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று இடப் பிரச்சினை காரணமாக வைத்திலிங்கத்தை வீரமணி மற்றும் அவரது தரப்பை சேர்ந்த அருள்(25), காமராஜ்(54), தருமன்(28), அய்யப்பன்(42) ஆகியோர் தகாத வார்த்தைகளால் திட்டி, தாக்கியதாக கூறப்படுகிறது.
இதேபோல் வீரமணியை வைத்திலிங்கம் மற்றும் அவரது தரப்பை சேர்ந்த ஜெயபால், பாலுசாமி, சுதா, வெண்ணிலா, அனு ஆகியோர் தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த வைத்திலிங்கம் மற்றும் வீரமணி ஆகியோர் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
11 பேர் மீது வழக்கு
இந்த சம்பவம் குறித்து வைத்திலிங்கம் மற்றும் வீரமணி ஆகியோர் தனித்தனியாக தா.பழூர் போலீசில் கொடுத்த புகாரின்பேரில், இருதரப்பை சேர்ந்த 3 பெண்கள் உள்பட 11 பேர் மீது சப்-இன்ஸ்பெக்டர் சரத்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
Related Tags :
Next Story