மணல் கடத்தி சென்றவரை விரட்டிப் பிடித்த பொதுமக்கள்
மணல் கடத்தி சென்றவரை பொதுமக்கள் விரட்டிப் பிடித்தனர்
பொன்னமராவதி
பொன்னமராவதி அருகே உள்ள ஆலவயல் ஊராட்சி பகுதியில் இருந்து சரக்கு வாகனங்களில் இருவர் மணல் கடத்தி கொண்டு விரைவாக சென்றனர். அதில், ஒரு சரக்கு வாகனம் வேகமாக சென்று விட்டது. பின்னால் வந்த சரக்கு வாகனம் அம்மன்குறிச்சி-ஆலவயல் சாலையில் சென்று கொண்டிருந்தபோது அதில் ஒரு வேன் எதிரே வந்த இருசக்கர வாகனத்தை உரசியபடி வேகமாக சென்றது. இதுகுறித்து தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் மணல் கடத்தி சென்ற 2-வது வாகனத்தை விரட்டிச் சென்று மடக்கி பிடித்து பொன்னமராவதி போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், திருச்சி மாவட்டம் மருங்காபுரி தாலுகா, ஊனையூர் கவிநாரிப்பட்டியை சேர்ந்த அஜித் (வயது 21) என்பது தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். தப்பி சென்ற மற்றொரு வாகனத்தை போலீசார் தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story