காதல் கணவருடன் தகராறு; இளம்பெண் தற்கொலை
காதல் கணவருடன் ஏற்பட்ட தகராறில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.
சூரமங்கலம்,
சேலம் அருகே நடந்த இந்த பரிதாப சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
காதல் திருமணம்
சேலம் குமரன் வட்டம் பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார். இவரும், நிர்மலாதேவி (26) என்பவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 10 வயதில் ஒரு மகன் உள்ளான். ராஜ்குமார் கூலி தொழிலாளி். இவர்கள் காதல் திருமணம் செய்து கொண்டதால் நிர்மலாதேவி பெற்றோரிடம் பேச்சுவார்த்தை இல்லாமல் இருந்துள்ளது.
இதற்கிடையே கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு ராஜ்குமார், தன்னுடைய மனைவியின் நகையை வங்கியில் அடகு வைத்துள்ளார். அடகு வைத்து ஒரு ஆண்டு ஆகி விட்டதால் அதனை திருப்புமாறு வங்கியில் இருந்து ராஜ்குமாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
கணவருடன் தகராறு
உடனே ராஜ்குமார், தன்னுடைய மனைவியிடம் நகைகளை அடகு வைத்ததற்கான ரசீதையும், நகைளை திருப்புவதற்கான பணத்தையும் கேட்டுள்ளார். அப்போது நிர்மலாதேவி தன்னிடம் பணம் இல்லை என்று கூறியதாகவும், அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
தகராறு முற்றவே ஆத்திரம் அடைந்த ராஜ்குமார், தன்னுடைய மகனை அழைத்துக்கொண்டு கோபத்தில் வீட்டை விட்டு வெளியேறினார். வீட்டில் நிர்மலாதேவி மட்டும் தனியாக இருந்துள்ளார்.
தற்கொலை
வீட்டில் தனியாக இருந்த நிர்மலாதேவி மனம் உடைந்து அழுது கொண்டிருந்ததாக தெரிகிறது. திடீரென வாழ்க்கையில் வெறுப்படைந்த அவர், வீட்டில் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் ராஜ்குமாருக்கு தகவல் தெரிவித்தனர்.
மனைவி இறந்த தகவலை கேட்டு அதிர்ச்சி அடைந்த ராஜ்குமார், கதறி அழுதபடி மகனுடன் வீட்டுக்கு வந்தார். காதல் மனைவியின் உடலை பார்த்து அழுது புலம்பினார்.
போலீசார் விசாரணை
இதுகுறித்து தகவல் அறிந்த சூரமங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். நிர்மலாதேவி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, நிர்மலாதேவி தற்கொலை தொடர்பாக அவருடைய கணவர் ராஜ்குமார், அவருடைய மகனிடமும் விசாரணை நடத்தினர். கணவருடன் ஏற்பட்ட தகராறில் காதல் மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story