நெல்லை மாநகரில் ஓராண்டில் 29 போலீஸ் அதிகாரிகள் விருப்ப ஓய்வு


நெல்லை மாநகரில் ஓராண்டில் 29 போலீஸ் அதிகாரிகள் விருப்ப ஓய்வு
x
தினத்தந்தி 4 Dec 2021 4:25 AM IST (Updated: 4 Dec 2021 4:25 AM IST)
t-max-icont-min-icon

29 போலீஸ் அதிகாரிகள் விருப்ப ஓய்வு

நெல்லை:
பாளையங்கோட்டை வி.எம்.சத்திரத்தை சேர்ந்த வக்கீல் பிரம்ம நாயகம், போலீஸ் துறையில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகள் மற்றும் விருப்ப ஓய்வு பெற்ற போலீசார் குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பல்வேறு கேள்விகளை கேட்டிருந்தார். அதற்கு நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகம் சார்பில் பதில் அளிக்கப்பட்டு உள்ளது.
அதில், “நெல்லை மாநகரில் கடந்த 2020-ம் ஆண்டு முதல் கடந்த செப்டம்பர் மாதம் வரை 29 பேர் விருப்ப ஓய்வு கேட்டு விண்ணப்பித்தார்கள். அவர்களது விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு விருப்ப ஓய்வுக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இதில் மாநகர ஆயுதப்படை இன்ஸ்பெக்டராக இருந்த ஒருவர் மற்றும் 3 சப்-இன்ஸ்பெக்டர்கள், 24 சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள், 1 ஏட்டு ஆகியோர் விருப்ப ஓய்வு பெற்று உள்ளனர். அவர்கள் குடும்ப சூழ்நிலை, வயது முதிர்வு, உடல்நலம் பாதிப்பு ஆகிய காரணங்களை தெரிவித்து உள்ளனர்” என்று கூறப்பட்டு உள்ளது.

Next Story