இந்து மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


இந்து மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 4 Dec 2021 6:52 PM IST (Updated: 4 Dec 2021 6:52 PM IST)
t-max-icont-min-icon

சபரிமலை கோவிலுக்கு செல்லும் வாகனங்களுக்கு சுங்க வரியை ரத்து செய்யக்கோரி இந்து மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினா்.

விழுப்புரம், 

விக்கிரவாண்டி சுங்கச்சாவடி அருகில் இந்து மக்கள் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு செல்லும் அனைத்து வாகனங்களுக்கும் சுங்க வரியை ரத்து செய்யக்கோரி நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் சாய்கமல் தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் பாரதமாதா செந்தில், மாநில செயலாளர் பாலு ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
இதில் மாவட்ட நிர்வாகிகள் மூர்த்தி, கோபி, செல்வம், வசந்த், சிவா, பழனிவேல், சந்திரன், நேதாஜி, சிலம்பு, அசோக்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story