விவசாயிக்கு ஆயுள் தண்டனை
விவசாயிக்கு ஆயுள் தண்டனை
தாராபுரம்,
தாராபுரத்தில் முதியவரை விறகு கட்டையால் தாக்கி கொலை செய்த விவசாயிக்கு ஆயுள் தண்டனை விதித்து தாராபுரம் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
கொலை
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த கருங்காலி வலசு பகுதியை சேர்ந்தவர் காளியப்பன் (வயது 70). விவசாயி. இவர் கடந்த 21.12.2017 அன்று காலையில் வெளியூர் செல்ல கொளத்துப்பாளையம் விநாயகர் கோவில் வழியாக நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த விவசாயி கோவிந்தசாமி (68) என்பவர் காளியப்பனை தடுத்து எங்கு செல்கிறாய் என கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
அதில் ஆத்திரமடைந்த கோவிந்தசாமி அருகில் கிடந்த விற்கு கட்டையை எடுத்து காளியப்பன் தலையில் பலமாக தாக்கினார். அதில் காளியப்பன் ரத்த வெள்ளத்தில் நிலை குலைந்து கீழே விழுந்தார். உடனே அருகில் இருந்தவர்கள் காளியப்பனை மீட்டு தாராபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி காளியப்பன் இறந்தார். இந்த கொலை குறித்து தாராபுரம் போலீசார் கோவிந்தசாமியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ஆயுள் தண்டனை
இந்த கொலை வழக்கு தாராபுரம் மூன்றாவது கூடுதல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதி குமார் சரவணன் நேற்று தீர்ப்பு கூறினார். அதில், காளியப்பனை கட்டையால் தாக்கி கொலை செய்த குற்றத்துக்காக கோவிந்தசாமிக்கு ஆயுள் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். அபராதம் கட்ட தவறினால் மேலும் ஓராண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் ஆனந்தன் ஆஜரானார்.
Related Tags :
Next Story