பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம்
பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம்
திருப்பூர், -
கொரோனா பரவலை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வந்த நிலையில் ஒமிக்ரான் வைரஸ் பரவல் பீதியால் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பனியன் தொழிற்சாலைகள் நிறைந்த திருப்பூருக்கு வெளிமாநிலத்தில் இருந்து அதிகம் பேர் ரெயில் மூலமாக வருகிறார்கள். இவ்வாறு வரும் தொழிலாளர்களுக்கு கொரோனா பரிசோதனை மற்றும் காய்ச்சல் பரிசோதனை திருப்பூர் ரெயில் நிலையத்தில் நடைபெற்று வருகிறது.
ஒமிக்ரான் வைரஸ் பரவல் எதிரொலி காரணமாக மருத்துவ பரிசோதனை அதிகரிக்கப்பட்டுள்ளது. வெளிமாநிலத்தில் இருந்து வரும் அனைத்து தொழிலாளர்களுக்கும் பரிசோதனை நடத்தப்படுகிறது. இதற்காக மருத்துவ குழுவினர் நியமிக்கப்பட்டு கண்காணித்து வருகிறார்கள். நேற்று வடமாநில தொழிலாளர்கள் அதிகம் பேர் வந்தனர். அவர்களை வரிசையாக நிற்க வைத்து பரிசோதனை மேற்கொண்டனர்.
Related Tags :
Next Story