விவசாயி கொலை வழக்கில் ஊராட்சி தலைவர் மகன் உள்பட 2 பேர் கைது


விவசாயி கொலை வழக்கில் ஊராட்சி தலைவர் மகன் உள்பட 2 பேர் கைது
x
தினத்தந்தி 4 Dec 2021 9:58 PM IST (Updated: 4 Dec 2021 9:58 PM IST)
t-max-icont-min-icon

விவசாயி கொலை வழக்கில் ஊராட்சி தலைவர் மகன் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

நயினார்கோவில்,
விவசாயி கொலை வழக்கில் ஊராட்சி தலைவர் மகன் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
கொலை
பரமக்குடி தாலுகா நயினார்கோவில் யூனியன் கிளியூர் நடு குடியிருப்பு பகுதியில் வசித்து வந்தவர் திருநாவுக்கரசு. விவசாயியான இவருக்கு சொந்தமான வயல் கொளுவூர் கொடிக்குளம் சாலையின் இடையே உள்ளது.
 இந்தநிலையில் விவசாயி திருநாவுக்கரசு வயலில் உரமிட்டு கொண்டு இருந்தபோது அடித்துக் கொலை செய்யப்பட்டார். இந்தநிலையில் உரம் இட சென்ற கணவனை காணாது தேடிய மனைவி மற்றும் உறவினர்கள் அருகே உள்ள வயலில் விவசாயி அடித்துக்கொலை செய்யப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் விவசாயியின்  உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். சம்பவ இடத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் ஆய்வு செய்து கொலை நடந்த வயலில் இறங்கி நள்ளிரவில் தடயங்களை சேகரித்தார். தடயவியல் துறையினரும் தடயங்களை சேகரித்தனர். மோப்பநாய் ஜூலி கொலை நடந்த இடத்தில் இருந்து  கொளுவூர் கிராமம் வரை சென்று நின்றது.
கைது
இந்தநிலையில் விசாரணையில்  இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டது கொளுவூர் பஞ்சாயத்து தலைவர் மங்களேஸ்வரி ராஜேந்திரன் மகன் ஜீவானந்தம் (வயது19) என்பது தெரிய வந்தது. ஜீவானந்தத்தின் உறவினருடன் திருநாவுக்கரசு கள்ளத்தொடர்பு வைத்து இருந்ததை கண்டித்ததால் ஏற்பட்ட தகராறில் ஜீவானந்தம் அவரை கொலைசெய்தது விசாரணையில் தெரியவந்தது. 
மேலும் கொலைக்கு மூளையாக செயல்பட்ட கிளியூர் வடக்கு குடியிருப்பு அங்குசாமி மகன் முத்துப்பாண்டி(19) என்பவரையும் போலீசார் கைது செய்தனர். இந்த கொலை வழக்கில் சிறப்பாக செயல்பட்ட சிறப்பு தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன் மற்றும் போலீசாருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாராட்டு தெரிவித்தார். 

Next Story