மழைநீரை அகற்றக்கோரி ரெயில் மறியல் போராட்டம் நடத்திய பெண்களால் பரபரப்பு
மழைநீரை அகற்றக்கோரி தூத்துக்குடியில் ரெயில் மறியல் போராட்டம் நடத்திய பெண்களால் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் மழை நீரை அகற்றக்கோரி பெண்கள் நேற்று ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
ரெயில் மறியல்
தூத்துக்குடி கீழூர் ரெயில் நிலையம் அருகில் 1-ம் ெரயில்வே கேட் பகுதியில் ெரயில்வே ஊழியர்கள் குடியிருப்பு உள்ளது. இங்கு சுமார் 70 வீடுகள் இருக்கின்றன. மிகவும் பழைமையானதும் தாழ்வாகவும் குடியிருப்பு பகுதி இருப்பதால் அதிக அளவில் மழைநீர் சூழ்ந்துள்ளது.
இந்நிலையில் தங்களது குடியிருப்பு பகுதியில் சூழ்ந்துள்ள மழை நீரை அகற்றவும், புதிய வீடுகள் கட்டித்தர கோரியும் ெரயில்வே ஊழியர்களின் குடும்பத்தை சேர்ந்த பெண்கள் நேற்று மாலை 5.15 மணிக்கு மைசூர் செல்ல தயாராக கீழூர் ெரயில் நிலையத்தில் நின்ற ெரயிலை மறித்து போராட்டம் நடத்தினர்.
பேச்சுவார்த்தை
தகவல் அறிந்ததும் தூத்துக்குடி மத்திய பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயப்பிரகாஷ் தலைமையிலான போலீசாரும், ரெயில்வே போலீசாரும் விரைந்து வந்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதுகுறித்து அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தி நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் அனைவரும் கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story