கிணற்றில் தவறி விழுந்து மூதாட்டி சாவு


கிணற்றில் தவறி விழுந்து மூதாட்டி சாவு
x
தினத்தந்தி 4 Dec 2021 10:25 PM IST (Updated: 4 Dec 2021 10:25 PM IST)
t-max-icont-min-icon

சாத்தான்குளம் அருகே கிணற்றில் தவறி விழுந்து மூதாட்டி இறந்தார்.

சாத்தான்குளம்:
சாத்தான்குளம் அருகே உள்ள அம்பலச்சேரியை சேர்ந்தவர் ஜேசுராஜ் மனைவி அன்னமரியாள் (வயது 86). இவருக்கு ஒரு மகனும், 3 மகன்களும் உள்ளனர். 
கணவர் இறந்த நிலையில் அன்னமரியாள், தனது மகள் குருசம்மாள் வீட்டில் வசித்து வந்தார். 
இந்நிலையில் நேற்று முன்தினம் காலை வீட்டில் இருந்து வெளியே சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. குடும்பத்தினர் அவரை தேடிய போது அப்பகுதியில் உள்ள கிணற்றில் அன்னமரியாள் பிணமாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர் தவறி விழுந்து கிணற்றில் மூழ்கி இறந்திருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் சாத்தான்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story