கீரம்பூர் அருகே டாஸ்மாக் பாரில் கோழி வியாபாரி தூக்குப்போட்டு தற்கொலை


கீரம்பூர் அருகே டாஸ்மாக் பாரில் கோழி வியாபாரி தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 4 Dec 2021 10:32 PM IST (Updated: 4 Dec 2021 10:32 PM IST)
t-max-icont-min-icon

கீரம்பூர் அருகே டாஸ்மாக் பாரில் கோழி வியாபாரி தூக்குப்போட்டு தற்கொலை

பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் கீரம்பூர் அருகே உள்ள டாஸ்மாக் கடையின் பின்புறம் அமைந்துள்ள பாரில் ஒருவர் வேட்டியால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக பரமத்தி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் டாஸ்மாக் பாருக்கு சென்ற போலீசார் தூக்கில் பிணமாக தொங்கியவரின் உடலை மீட்டு வேலூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி ைவத்தனர். 
போலீசார் முதற்கட்ட விசாரணையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டவர் திருப்பூர் மாவட்டம் சொர்ணபுரி லே-அவுட் கோம்பை தோட்டத்தை சேர்ந்த ராஜேந்திரன் (வயது 45) என்பதும், கோழி வியாபாரியான அவர் வியாபாரத்துக்கு கோழிகளை வாங்கி செல்வதற்காக நாமக்கல் வந்ததும் தெரியவந்தது. மேலும் ராஜேந்திரன் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டு தூக்கில் தொங்க விடப்பட்டாரா? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story