நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 15 காசுகள் உயர்வு 465 காசுகளாக உயர்வு


நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 15 காசுகள் உயர்வு 465 காசுகளாக உயர்வு
x
தினத்தந்தி 4 Dec 2021 10:32 PM IST (Updated: 4 Dec 2021 10:32 PM IST)
t-max-icont-min-icon

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 15 காசுகள் உயர்வு 465 காசுகளாக உயர்வு

நாமக்கல்:
நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 15 காசுகள் உயர்ந்து, 465 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
முட்டை விலை உயர்வு
நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 450 காசுகளாக இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று நாமக்கல்லில் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முட்டையின் கொள்முதல் விலையை அதிரடியாக 15 காசுகள் உயர்த்த முடிவு செய்தனர். எனவே முட்டை கொள்முதல் விலை 465 காசுகளாக உயர்ந்து உள்ளது.
பிற மண்டலங்களில் முட்டை விலை காசுகளில் வருமாறு:- சென்னை-485, ஐதராபாத்-455, விஜயவாடா-469, மைசூரு-472, மும்பை-510, பெங்களூரு-470, கொல்கத்தா-525, டெல்லி-555.
கறிக்கோழி கிலோ ரூ.95-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று பல்லடத்தில் நடந்த கறிக்கோழி ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் அதன் விலையை கிலோவுக்கு ரூ.4 உயர்த்த முடிவு செய்தனர். எனவே கறிக்கோழி விலை கிலோ ரூ.99 ஆக உயர்ந்து உள்ளது. முட்டைக்கோழி கிலோ ரூ.75-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதன் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை.
அட்டை தட்டுப்பாடு
முட்டை விலை உயர்வு குறித்து தமிழ்நாடு முட்டைக்கோழி பண்ணையாளர்கள் மார்க்கெட்டிங் சொசைட்டி தலைவர் வாங்கிலி சுப்ரமணியம் கூறியதாவது:-
கடந்த ஒரு வாரமாக வடமாநிலங்களுக்கு முட்டை விற்பனைக்கு அனுப்பப்பட்டு வருகிறது. மேலும் முட்டை ஏற்றுமதியும் செய்யப்படுகிறது. அதன்படி ஒரு வாரத்தில் மட்டும் 1½ கோடி முட்டை அனுப்பப்பட்டு உள்ளது. வடமாநிலங்களில் குளிர்காலம் தொடங்கி உள்ளதால், இது மேலும் அதிகரிக்கும்.
மேலும் மழை காரணமாக முட்டைகளை அடுக்கி வைக்க அட்டை தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளதால், முட்டை அனுப்ப முடியாத நிலை உள்ளது. ஒரு மாதத்தில் நிலைமை சீராகி, அதிக அளவில் முட்டைகள் அனுப்பப்படும். அப்போது முட்டை கொள்முதல் விலையும் அதிகரிக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story