கோவில்பட்டியில் நீர்வரத்து ஓடை ஆக்கிரமிப்புகள் அகற்றம்


கோவில்பட்டியில் நீர்வரத்து ஓடை ஆக்கிரமிப்புகள் அகற்றம்
x
தினத்தந்தி 4 Dec 2021 10:33 PM IST (Updated: 4 Dec 2021 10:33 PM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டியில் நீர்வரத்து ஓடை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

கோவில்பட்டி:
கோவில்பட்டியில் நீர்வரத்து ஓடை ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நேற்று நடந்தது.

ஓடை ஆக்கிரமிப்பு

நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து தமிழக தலைமைச் செயலாளர் அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கான நடவடிக்கை எடுக்க அறிவுரை வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் உத்தரவின் பேரில் கோவில்பட்டி உதவி கலெக்டர் சங்கரநாராயணன் தலைமையில், தாசில்தார் அமுதா, நகரசபை சுகாதார அதிகாரி நாராயணன், சுகாதார ஆய்வாளர் வள்ளிராஜ், மற்றும் சுகாதார பணியாளர்கள், பொக்லைன் எந்திரம் மற்றும் கிரேன் போன்ற எந்திரங்களை வைத்து, கோவில்பட்டி மெயின் ரோட்டில் நீர்வரத்து ஓடையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றினார்கள்.
பாதுகாப்பு ஏற்பாடுகளை துணை போலீஸ் சூப்பிரண்டு உதயசூரியன் உத்தரவின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சுஜித் ஆனந்த், சபாபதி, பத்மாவதி மற்றும் போலீசார் செய்திருந்தனர்.

உதவி கலெக்டர் ஆய்வு

கயத்தாறு தாலுகாவை சேர்ந்த வடக்கு இலந்தைகுளம் கிராமத்தில் ஊருக்கு மேல்புறத்தில் உள்ள குளத்தில் மடைகள் மற்றும் கால்வாய்கள் நடைபாதைகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது என மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை நீதிபதி விசாரித்து, உடனடியாக ஆக்கிரமிப்புகளை அகற்றக்உத்தரவிட்டார். அதன் பேரில் கோவில்பட்டி உதவி கலெக்டர் சங்கரநாராயணன், கயத்தாறு தாசில்தார் பேச்சிமுத்து, வருவாய் ஆய்வாளர் நேசமணி, கிராம நிர்வாக அலுவலர் லதா மற்றும் பஞ்சாயத்து தலைவர் கணபதி ஆகியோர் அந்த இடங்களுக்குச் சென்று ஆக்கிரமிப்புகளை பார்வையிட்டனர். பின்னர் அதனை உடனடியாக அகற்றக்கோரியும், அது தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடத்தி சரிசெய்யக்கோரியும் பஞ்சாயத்து தலைவரிடம் கூறினர்.

Next Story