காய்கறி விலை கிடுகிடு உயர்வு
கனமழையினால் உற்பத்தி பாதிக்கப்பட்டதின் எதிரொலியாக திருவாரூரில் காய்கறி விலை கிடுகிடு உயர்வால் கத்தரிக்காய் கிலோ ரூ.90-க்கு விற்பனையானது.
திருவாரூர்:
கனமழையினால் உற்பத்தி பாதிக்கப்பட்டதின் எதிரொலியாக திருவாரூரில் காய்கறி விலை கிடுகிடு உயர்வால் கத்தரிக்காய் கிலோ ரூ.90-க்கு விற்பனையானது.
காய்கறி விலை கிடுகிடு உயர்வு
கடந்த அக்டோபர் மாதம் இறுதியில் தொடங்கிய வடகிழக்கு பருவ மழை தீவிரம், காற்றழுத்த தாழ்வு நிலை என பல்வேறு காரணங்களால் நவம்பர் மாதம் சராசரியான மழையை விட கூடுதலாக பெய்தது.
இந்த மழை தமிழகம் முழுவதும் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. இதில் காய்கறிகள் மழையில் சேதமடைந்து உற்பத்தி பாதிக்கப்பட்டது. காய்கறிகள் உற்பத்தி பாதிப்பினால் விலை கிடுகிடுவென உயர்ந்து உச்சத்தை எட்டியது.
அதன்படி திருவாரூரில் காய்கறி விலை பற்றிய விவரம் கிலோவில் வருமாறு:-
விலை உயர்வால் பொதுமக்கள் பாதிப்பு
பச்சை மிளகாய் ரூ.15-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது ரூ.30-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் கத்தரிக்காய் ரூ.40-ல் இருந்து ரகத்திற்கு ஏற்ப ரூ.90 வரை விற்பனை செய்யப்பட்டது. வெண்டைகாய் ரூ.40-ல் இருந்து ரூ.90-க்கும், பீன்ஸ் ரூ.30-ல் இருந்து ரூ.80-க்கும், கொத்தவரங்காய் ரூ.20-ல் இருந்து ரூ.70-க்கும், கேரட் ரூ.40-ல் இருந்து ரூ.80-க்கும், முள்ளங்கி ரூ.25-ல் இருந்து ரூ.75-க்கும் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
இதேபோல் அனைத்து காய்கறிகள் விலைகளும் கடுமையாக உயர்ந்துள்ளன. இந்த விலை உயர்வினால் பொதுமக்கள் மிகுந்த பாதிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது மழை ஓய்ந்த நிலையில் காய்கறிகளின் உற்பத்தியை அதிகரித்தால்தான் விலை உயர்வை கட்டுப்படுத்த முடியும். இந்த விலை உயர்வு மேலும் ஒரு மாதத்திற்கு நீடிக்கும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story