மது விற்றதாக ஒரேநாளில் 223 பேர் கைது


மது விற்றதாக ஒரேநாளில் 223 பேர் கைது
x
தினத்தந்தி 5 Dec 2021 12:39 AM IST (Updated: 5 Dec 2021 12:39 AM IST)
t-max-icont-min-icon

மது விற்றதாக ஒரேநாளில் 223 பேர் கைது

திருச்சி, டிச.5-
திருச்சி சரகத்திற்கு உட்பட்ட திருச்சி, புதுக்கோட்டை, கரூர், பெரம்பலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் போதை பொருள் விற்பனையை தடுக்க நடந்த சோதனையில்93½கிலோகுட்காபறிமுதல்செய்யப்பட்டதோடு, 243 பேர் கைது செய்யப்பட்டனர். இதனை தொடர்ந்து திருச்சி சரகத்திற்கு உட்பட்ட 5 மாவட்டங்களில் நேற்று முன்தினம் கள்ளச்சந்தையில் மது பாட்டில்கள் விற்பனையை தடுப்பது தொடர்பாக அதிரடி சோதனை நடைபெற்றது. இச்சோதனை மூலம் கள்ளச்சந்தையில் மது விற்றதாக ஒரேநாளில் 223 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அதன்படி, திருச்சி-60, புதுக்கோட்டை-48, கரூர்-52, பெரம்பலூர்-32, அரியலூரில்-31 வழக்குகள் என மொத்தம் 223 வழக்குகள்  பதியப்பட்டு, 223 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து ரூ.2 லட்சத்து 85 ஆயிரம் மதிப்பிலான 2,345 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாக டி.ஐ.ஜி. சரவணசுந்தர் தெரிவித்துள்ளார்.

Related Tags :
Next Story