வேனில் கொண்டு சென்ற 423 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்


வேனில் கொண்டு சென்ற 423 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 4 Dec 2021 7:34 PM GMT (Updated: 2021-12-05T01:04:50+05:30)

வேனில் கொண்டு சென்ற 423 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்

திருச்சி, டிச.5-
திருச்சி மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் ரமேஷ்பாபு உத்தரவின்படி உணவு பாதுகாப்பு அலுவலர் வடிவேலு தலைமையிலான அதிகாரிகள் துவரங்குறிச்சியில் உள்ள திருச்சி மெயின் ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, சோப்பு ஏற்றி சென்ற ஒரு சரக்கு வாகனத்தில் சோதனை செய்த போது, அதில் 29 மூட்டைகளில் 423 கிலோ அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கொண்டு சென்றது தெரியவந்தது. இதனையடுத்து அவர்கள் அதனை பறிமுதல் செய்தனர். பின்னர் மணப்பாறை கோர்ட்டில் சரக்கு வாகனம் ஒப்படைக்கப்பட்டது.
இது தொடர்பாக மாவட்ட நியமன அலுவலர் கூறுகையில், தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட மெல்லும் புகையிலை பொருட்கள் எந்த இடங்களிலும் விற்பனை செய்யவோ வைத்திருக்கவோ கூடாது. பொதுமக்களும் இது போன்ற புகார்களை எங்களுக்கு தெரிவிக்கலாம் என்றார்.

Next Story