கார்த்திகை அமாவாசையை முன்னிட்டு மிளகாய் சண்டி யாகம்
கார்த்திகை அமாவாசையை முன்னிட்டு மிளகாய் சண்டி யாகம் நடந்தது.
தாமரைக்குளம்:
அரியலூர் மாவட்டம் பொய்யாதநல்லூர் கிராமத்தில் உள்ள சாமுண்டீஸ்வரி கோவில் சன்னதியில் மகா பிரத்தியங்கரா தேவிக்கு நேற்று கார்த்திகை மாத அமாவாசையை முன்னிட்டு மிளகாய் சண்டி யாகம் நடைபெற்றது. இதில் யாகத்தில் மிளகாய் வத்தல்கள், மஞ்சள், குங்குமம், கரும்பு உள்பட பல்வேறு மூலிகைகள் மற்றும் பழங்கள், சேலைகள் ஆகியவற்றை யாகத்தில் போடப்பட்டது. பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
Related Tags :
Next Story