அரூர் அருகே 16 வயது சிறுமிக்கு திருமணம் பெற்றோர் உள்பட 55 பேர் மீது வழக்கு


அரூர் அருகே 16 வயது சிறுமிக்கு திருமணம் பெற்றோர் உள்பட 55 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 5 Dec 2021 1:41 AM IST (Updated: 5 Dec 2021 1:41 AM IST)
t-max-icont-min-icon

அரூர் அருகே 16 வயது சிறுமிக்கு திருமணம் செய்ததாக பெற்றோர் உள்பட 55 பேர் மீது போலீசார் வழக்கு செய்துள்ளனர்.

அரூர்:
தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள ஆண்டிப்பட்டி புதூர் கிராமத்தை சேர்ந்தவர் அர்ஜுன் (வயது 25). இவருக்கும், 16 வயது சிறுமிக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த இளம் வயது திருமணம் குறித்து சமூக நலத் துறை அலுவலர்களுக்கு தகவல் கிடைத்தது. இதுகுறித்து அரூர் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார், அர்ஜுன், அவருடைய பெற்றோர், சிறுமியின் பெற்றோர் மற்றும் திருமணத்தில் பங்கேற்ற உறவினர்கள் உள்பட 55 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story