தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 5 Dec 2021 2:12 AM IST (Updated: 5 Dec 2021 2:12 AM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி புகார் பெட்டி

குப்பைகள் அகற்றப்பட்டது
கல்லுக்கூட்டம் பஞ்சாயத்துக்குட்பட்ட 12-வது வார்டில் ஒரு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது. இதன் அருேக அரசு பள்ளி, மீன்சந்தை, பஞ்சாயத்து மற்றும் கிராம நிர்வாக அலுவலகங்கள் உள்ளன. அந்த பகுதியில் வீடுகளில் சேகரிக்கப்படும் குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகளை மூடைகளாக கட்டி நீர்த்தேக்க தொட்டியின் அடிப்பகுதியில் வைத்திருந்தனர். இதனால், அந்த பகுதியில் துர்நாற்றம் வீசியதுடன் சுகாதார சீர்கேடும் ஏற்பட்டது. இதுகுறித்து ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. உடனே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குப்பைகளை அகற்றினர். செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.  

சீரமைக்க வேண்டிய சாலை
சகாயநகர் பஞ்சாயத்துக்குட்பட்ட அனந்தபத்மநாபபுரம் மேலத்தெருவில் சாலை மிகவும் சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. மழைக்காலங்களில் சாலையில் உள்ள பள்ளங்களில் வெள்ளம் தேங்கி நிற்பதால் இருசக்கர வாகனங்களில்செல்கிறவர்கள் விபத்தில் சிக்குகிறார்கள். எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
                                               -மணிகண்டன், அனந்தபத்மநாபபுரம்.

அகற்ற வேண்டிய மின்கம்பம்
பறக்கையில் ஐ.எஸ்.இ.டி. பஸ் நிறுத்தம் அருகே உள்ள மின்கம்பம் மிகவும் சேதமடைந்து கம்பிகள் வெளியே தெரிந்த நிலையில் உள்ளது. இந்த மின்கம்பத்தின் அருேக தினமும் ஏராளமான பொதுமக்கள் பஸ்சுக்காக காத்து நிற்கிறார்கள். மின்கம்பம் ேசதமடைந்துள்ளதால் அவர்கள் ஒருவித அச்சத்துடன் நிற்கிறார்கள். எனவே, ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பத்தை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
                                                                                              -ராஜா, பறக்கை.

சுகாதார சீர்கேடு
ரீத்தாபுரம் அருகே உள்ள கரையாக்குளம், சேவிளை பகுதியில் சாலையில் மழைநீரும், கழிவு நீரும் நீண்ட நாட்களாக தேங்கி நிற்கிறது. இதனால், அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. மேலும், சாலையில் தண்ணீர் நிற்பதால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. எனவே, இதை சரி செய்ய சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுப்பார்களா?
                                                                                  -தங்கப்பன், சேவிளை.

சாலை சீரமைக்கப்படுமா?
தெங்கம்புதூர் பேரூராட்சிக்குட்பட்ட வைராவிளை ஜங்ஷனில் இருந்து குஞ்சன்விளை செல்லும் சாலை மிகவும் சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. மழைக்காலங்களில் இந்த சாலை சேறும், சகதியுமாக காணப்படுகிறது. இதனால் இந்த சாலையில் பயணம் செய்யும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். அத்துடன் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆபத்தான நிலையில் உள்ள சாலையை சீரமைக்க விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
                                                                            -அ.தியாகு, வைராவிளை.

போக்குவரத்து நெரிசல்
குளச்சல் பஸ் நிலையத்தின் எதிரே சாலையில் மினி பஸ்கள், ஷேர் ஆட்டோக்களை நிறுத்தி ஆட்களை ஏற்றி செல்கிறார்கள். இவ்வாறு நிற்கும் வாகனங்கள் நீண்ட நேரமாக நிற்பதால் பிற வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. இதனால், அந்த பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே, இதை சரி செய்ய சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
                                                                                       -சேகர், கணேசபுரம்.

சேதமடைந்த தேசிய நெடுஞ்சாலை
நாகர்கோவில்- களியக்காவிளை தேசிய நெடுஞ்சாலை மிகவும் சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. குறிப்பாக தோட்டியோடு, சாமியார்மடம், மார்த்தாண்டம், திருத்துவபுரம் போன்ற பகுதிகளில் சாலை மிகவும் குண்டும், குழியுமாக உள்ளது. திருத்துவபுரத்தில் சாலையில் உள்ள பள்ளங்களில் 2 முறை மண் போட்டு நிரப்பினார்கள். ஆனால், அவை சில நாட்களில் மீண்டும் குண்டும், குழியுமாக மாறியது. எனவே, சாலையை தரமான முறையில் சீரமைக்க சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
                                                         -பொன்.ஜெயராஜ், திருத்துவபுரம்.

பஸ் வசதி வேண்டும்
கொட்டாரம், பொற்றையடி, சுசீந்திரம், மருங்கூர், ராஜாவூர் போன்ற பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் காவல்கிணறு செல்ல நேரடி பஸ் வசதி இல்லை. இதனால், இந்த பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் 2 அல்லது 3 பஸ்கள் ஏறி செல்கிறார்கள். எனவே, கன்னியாகுமரியில் இருந்து மேற்கூறிய ஊர்கள் வழியாக காவல்கிணறுக்கு பஸ் இயக்க வேண்டும்.
                                                                 -கே.ஏ.நாராயணன், மருங்கூர்.


Next Story