சேலம் மாவட்டத்தில் புதிதாக 39 பேருக்கு கொரோனா மூதாட்டி பலி
சேலம் மாவட்டத்தில் புதிதாக 39 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மூதாட்டி ஒருவர் பலியானார்.
சேலம்,
சேலம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்து வருகிறது. நேற்று முன்தினம் 41 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், நேற்று புதிதாக 39 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது பரிசோதனையில் தெரியவந்துள்ளது. சேலம் மாநகராட்சி பகுதிகளில் 8 பேர், ஓமலூரில் 5 பேர், மேச்சேரி, மேட்டூர், வீரபாண்டியில் தலா 2 பேர் மற்றும் கொளத்தூர், மகுடஞ்சாவடி, சேலம் ஒன்றியம், சங்ககிரி, ஆத்தூர், கெங்கவல்லி, பனமரத்துப்பட்டி, தலைவாசல், வாழப்பாடி ஆகிய பகுதிகளில் தலா ஒருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுதவிர, சேலம் மாவட்டத்திற்கு நாமக்கல் மற்றும் ஈரோட்டில் இருந்து வந்த தலா 3 பேருக்கும், தர்மபுரி மற்றும் திருச்சியில் இருந்து வந்த தலா 2 பேருக்கும், கரூரில் இருந்து வந்த ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து ஆயிரத்து 520 ஆக அதிகரித்துள்ளது. நோய் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த 37 பேர் குணமடைந்துவிட்டதால் அவர்கள் நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். சேலத்தை சேர்ந்த 69 வயதான மூதாட்டி ஒருவர் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்தநிலையில் நேற்று அவர் உயிரிழந்தார்.
Related Tags :
Next Story