மாணவ, மாணவிகள் புகார் தெரிவிக்க தொலைபேசி எண் நெல்லை கலெக்டர் விஷ்ணு தகவல்
மாணவ, மாணவிகள் புகார் தெரிவிக்க தொலைபேசி எண்
நெல்லை:
மாணவ-மாணவிகள் புகார் தெரிவிக்க இலவச தொலைபேசி எண்கள் உள்ளதாக நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு தெரிவித்து உள்ளார்.
விழிப்புணர்வு கூட்டம்
நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் கலெக்டர் விஷ்ணு தலைமையில், காணொலி காட்சி மூலம் மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 300 தலைமை ஆசிரியர்கள், கல்வித்துறை அதிகாரிகள், சமூகநலத்துறை அதிகாரிகளுடனான, விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.கூட்டத்தில் கலெக்டர் விஷ்ணு பேசுகையில் கூறியதாவது:-
நெல்லை மாவட்டத்தில் மாணவ, மாணவிகளிடம் பாலியல், தீண்டாமை உள்ளிட்ட பிரச்சினைகள் தொடர்பான புகார்களை தெரிவிப்பது, அதற்கு தீர்வு காண்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். பள்ளிக்கூட மாணவ, மாணவிகள் சந்தித்து வரும் பாலியல் தொடர்பான பிரச்சினைகள் குறித்த புகார்களை தெரிவிக்கும் வகையில் பள்ளியில் முகப்பு பகுதி, வகுப்பறை, கழிப்பறை, கலையரங்கம் மற்றும் மாணவ - மாணவிகள் கூடும் இடங்கள் உள்ளிட்ட 5 இடங்களில் உடனடியாக பாலியல் குற்றங்களை தொடர்பான புகார்கள் தெரிவிக்கவும். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான புகார்களை தெரிவிக்கும் வகையில் அரசு அறிவித்த இலவச உதவி எண்கள் அடங்கிய பதாகைகளை காட்சிபடுத்த வேண்டும். மகளிர் தொடர்பான பிரச்சினைகளுக்கு 181, குழந்தைகள் தொடர்பான பிரச்சினைகளுக்கு 1098, மாணவ-மாணவிகள் தொடர்பான பிரச்சினைகளுக்கு 14417 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.
கிராம குழுக்கள்
ஆசிரியர்கள் கிராம பகுதியில் உள்ள முக்கிய நிர்வாகிகள், காவல்துறையினர் அடங்கிய கிராம குழுக்களை விரைவில் உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுபாஷினி, சமூக நலத்துறை அலுவலர் சரஸ்வதி மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story