டாஸ்மாக் கடை சுவற்றில் துளை போட்டு மதுபாட்டில்கள் திருட்டு


டாஸ்மாக் கடை சுவற்றில் துளை போட்டு மதுபாட்டில்கள் திருட்டு
x
தினத்தந்தி 5 Dec 2021 6:55 PM IST (Updated: 5 Dec 2021 6:55 PM IST)
t-max-icont-min-icon

டாஸ்மாக் கடை சுவற்றில் துளை போட்டு மதுபாட்டில்கள் திருட்டு

தண்டராம்பட்டு

தண்டராம்பட்டு அருகிலுள்ள தரடாப்பட்டு கிராமத்தில் எதிர் மேடு என்ற இடத்தில் டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது.

 இங்கு பணிபுரியும் மேற்பார்வையாளர் சேட்டு, விற்பனையாளர்கள் மூர்த்தி, முருகன் ஆகியோர் நேற்று கடையை பூட்டிக் கொண்டு விற்பனை பணத்தை எடுத்துக் கொண்டு வீட்டுக்குச் சென்று விட்டனர்.

இன்று காலை கடை திறக்க வந்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்த போது கடையின் பின்புறத்தில் சுவற்றில் துளை போட்டு மர்ம ஆசாமிகள் ரூ.3 ஆயிரம் மதிப்பிலான மது பாட்டில்களை திருடிச் சென்றது தெரியவந்தது. 

இதுகுறித்து தண்டராம்பட்டு போலீசில்புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story